கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-13 18:37 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல்துறையினர் கல்லாத்தூர் பாப்பாக்குடி பிரிவு சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா வைத்திருந்த கடலூர் மாவட்டம் வள்ளியம் பகுதியை சேர்ந்த வீரமணி(வயது 29), வேட்டக்குடி பகுதியை சேர்ந்த ராஜதுரை(28) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்