பள்ளி வளாகத்தில் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது
பள்ளி வளாகத்தில் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொட்டியம்:
தொட்டியம் அருகே பாப்பாரபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் செய்முறை தேர்வு நடந்தது. அப்போது ஜடமங்கலத்தை சேர்ந்த முகேஷ்(வயது 22), ரகுபதி (24) ஆகியோர் பள்ளி வளாகத்தில் கூச்சலிட்டு இருசக்கர வாகனத்தில் அதிக ஒலி எழுப்பியபடி சுற்றி வந்துள்ளனர். மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர்கள் அதனை தட்டிக்கேட்டபோது, அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். இதைக்கண்ட பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமோகன் மற்றும் ஆசிரியர்கள் நேரில் சென்று முகேஷ், ரகுபதி ஆகியோரிடம் கேட்டபோது, அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகேஷ், ரகுபதி ஆகியோரை கைது செய்தனர்.