லாரி மோதி வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் பலி

லாரி மோதி வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-11-29 19:42 GMT

வி.கைகாட்டி:

வடமாநில தொழிலாளர்கள்

அரியலூர் மாவட்டத்தில் சிமெண்டு ஆலைகள் மற்றும் டைல்ஸ் ஒட்டும் பணி போன்றவற்றில் வெளிமாநிலங்களை சேர்ந்த பலர் வேலை செய்து வருகின்றனர். இதன்படி பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் ராஜூ(வயது 45), ராஜஸ்தான் மாநிலம் சூப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திபு ஆகியோர் அரியலூர் மாவட்டத்தில் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில் இவர்கள் 2 பேரும் நேற்று இரவு அரியலூரில் பணியை முடித்துக்கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் வி.கைகாட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது காட்டுப்பிரிங்கியம் கிராமத்தை சேர்ந்த பெரியசாமியின் மகன் கருப்பையன்(50) ஓட்டி வந்த ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜூ, திபு அகிய 2 பேரும் காயமடைந்து சாலையில் விழுந்தனர்.

2 பேர் சாவு

அப்போது பின்னால் வந்த லாரி, அவர்கள் மீது ஏறியதில், 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த கருப்பையன் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கயர்லாபாத் போலீசார், உயிரிழந்த 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே விபத்துகள் ஏற்படுவதை தடுக்க, அப்பகுதியில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்