வெடி விபத்துகளில் மேலும் 2 பேர் பலி
சிவகாசி அருகே வெடி விபத்துகளில் மேலும் 2 பேர் பலியாகினர்.
சிவகாசி அருகே வெடி விபத்துகளில் மேலும் 2 பேர் பலியாகினர்.
வெடி விபத்து
சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்தநிலையில் கடந்த 19-ந் தேதி பட்டாசு தயாரிக்கும் பணியில் திருத்தங்கல் மேலமாடவீதியை சேர்ந்த ரவி (வயது58), சாமுவேல் ஜெயராஜ் உள்பட பல ெதாழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் ரவி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தில் படுகாயம் அடைந்த சாமுவேல் ஜெயராஜ் என்பவர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.
மற்றொரு சம்பவம்
சிவகாசி அருகே தாயில்பட்டி கணஞ்சாம்பட்டியில் கடந்த 19-ந் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் முனீசுவரி, சங்கர், கருப்பசாமி, மாரிமுத்து ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து 6 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தொழிலாளியான ராஜ்குமார் (வயது 38) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்த்துள்ளது.
மேலும் லேசான காயங்களுடன் 15 பேர் சிவகாசி, சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.