மது கொடுத்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் 2 பேர் கைது

முசிறி அருகே சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-16 19:30 GMT

முசிறி அருகே சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிறுமியுடன் பழக்கம்

திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த அய்யம்பாளையம் அந்தரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகன் ரங்கநாதன்(வயது 33). இவர் பெயிண்டிங் மற்றும் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு இவருக்கும், 16 வயது சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ரங்கநாதன், தனது செல்போன் மற்றும் சிறுமிக்கு தேவையான சிறு சிறு பொருட்களை கொடுத்து, அந்த சிறுமியுடன் நெருங்கி பழகியுள்ளார். மேலும் சிறுமி, தனது பெற்றோர் இல்லாத நேரத்தில் ரங்கநாதனின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.

பாலியல் பலாத்காரம்

அவ்வாறு சென்று வந்தபோது ரங்கநாதனின் நண்பர்களான சிறுகாம்பூரை சேர்ந்த கணேசனின் மகன் மணிகண்டன்(23), ராஜமாணிக்கத்தின் மகன் தர்மா என்ற கணேசன்(28) மற்றும் அவரது நண்பர்கள் 2 பேருக்கும் சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 5 பேரும் சிறுமியுடன் பழகி வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று அவர்கள், கோட்டூர் ஆற்றுப்படுகை அருகில் உள்ள தைலமரக்காட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமிக்கு மது கொடுத்துள்ளனர். பின்னர் போதையில் இருந்த சிறுமியை, ரங்கநாதன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

வீடியோ எடுத்தனர்

இதனை மற்ற 4 பேரும் செல்போனில் வீடியோ எடுத்தனர். பின்னர் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இது பற்றி வெளியில் கூறினால், வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர்.

இது குறித்து முசிறி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரங்கநாதன், மணிகண்டன், தர்மா என்ற கணேசன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று இவ்வழக்கில் தொடர்புடைய சிறுகாம்பூர் குடித்தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் தினேஷ் (23), ஐயப்பனின் மகன் கபாலி ராஜா என்கிற சரண் (20) ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்