கிணத்துக்கடவு
ஆனைமலை அருகே கோட்டூர் மலையாண்டிபட்டினம் அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 29). தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி-கோவை நான்கு வழிச்சாலையில் தனது உறவினர் நிர்மல் குமார்(28) என்பவருடன் சென்றார். இருசக்கர வாகனத்தை நிர்மல்குமார் ஓட்டினார்.
தாமரைகுளம் பகுதியில் எதிரே வந்த கார் திடீரென இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் கோவிந்தராஜ், நிர்மல் குமார் படுகாயமடைந்தனர். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் காரை ஓட்டி வந்த நெம்பர் 10 முத்தூர் அருகே உள்ள சங்கராபுரம் பகுதியை சேர்ந்த செல்வக்குமாரசாமி(51) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.