மோட்டார் சைக்கிள் விபத்தில் அரசு ஊழியர்கள் 2 பேர் பலி

ஆம்பூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது மற்றொரு மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் அரசு ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-11-20 16:12 GMT

ஆம்பூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது மற்றொரு மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் அரசு ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு உசேன் தெருவை சேர்ந்தவர் இதயகுமார் (வயது 27). இவர் வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இரவு 11 மணி அளவில் பணியை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

உமராபாத் அருகே உள்ள அயித்தம்பட்டு கூட்ரோட்டில் வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது இவரது மோட்டார் சைக்கிள் மோதியது.

2 பேர் பலி

இதில் இதயகுமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற அயித்தம்பட்டு பகுதியை சேர்ந்த கிராம உதவியாளர் மூர்த்தி (வயது 56) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மூர்த்தி இறந்தார்.

மேலும் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இதயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்