திருப்பரங்குன்றம் கோவிலில் ஒரே நாளில் 2 விழா -வைகுண்ட ஏகாதசி-கார்த்திகை கொண்டாட்டம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று ஒரே நாளில் வைகுண்ட ஏகாதசி, கார்த்திகை விழா ஆகிய 2 விழாக்கள் கொண்டாடப்பட்டது

Update: 2023-01-02 21:40 GMT

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று ஒரே நாளில் வைகுண்ட ஏகாதசி, கார்த்திகை விழா ஆகிய 2 விழாக்கள் கொண்டாடப்பட்டது

ஒரே நாளில் 2 விழா

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை தினத்தன்று தங்கமயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வருவது வழக்கம். இந்த கோவிலின் கருவறையில் பவளக்கனிவாய் பெருமாள் அமைந்துள்ளார்.

மீனாட்சிஅம்மன்-சுந்தரேஸ்வரருக்கு தாரைவார்த்து கொடுப்பவரே பவளக்கனிவாய் பெருமாள் தான். ஆகவே இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி நாளில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது.

வைகுண்ட ஏகாதசி நாளான நேற்று மாலையில் வழக்கம் போல கோவிலுக்குள் மடப்பள்ளியையொட்டி உள்ள பெரியகதவில் நாமம் போட்டு மலர்களால்அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்தது.

இந்தநிலையில் உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க பெரிய கதவு (சொர்க்கவாசல்) வழியாக பவளக்கனிவாய்பெருமாள் எழுந்தருளி கோவிலுக்குள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

.

மாதகார்த்திகை

இதனை தொடர்ந்து மார்கழி மாத கார்த்திகை நேற்று மாலை 5.30மணியளவில் தொடங்கியது.மேலும் இன்று (3-ந்தேதி) மாலை 6 மணிக்கு கார்த்திகை நட்சத்திரம் நிறைவடைகிறது. இதனையொட்டி வழக்கம் போல நேற்று மார்க்கழி மாத கார்த்திகை விழா நடைபெற்றது. விழாவையொட்டி தங்கமயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்