ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம்..!

ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Update: 2022-11-07 12:02 GMT

சென்னை,

ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது 3 மாவட்டங்களில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவம்பர் 10-ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொள்கிறார்.

கரூரில் 11-ம் தேதி நடைபெறும் 50,000 விவசாயிகளுக்கு மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்