2 பஸ்கள் மோதிய விபத்து: கடலூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆறுதல்

2 பஸ்கள் மோதிய விபத்தில் கடலூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களுக்கு முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் ஆறுதல் தெரிவித்தாா்.

Update: 2023-06-20 18:45 GMT


கடலூர் அருகே மேல்பட்டாம்பாக்கம் நாராயணபுரம் மெயின்ரோட்டில் நேற்று முன்தினம் காலை 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். மேலும் 90 பேர் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்தனர். அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியிலும், புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே இந்த விபத்து குறித்து அறிந்த கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் நேற்று முன்தினம் இரவு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் விபத்தில் காயமடைந்து அங்கு சிகிச்சை பெற்றவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அங்கிருந்த டாக்டர்களிடம், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி அறிவுறுத்தினார். அப்போது மாவட்ட அவைத்தலைவர் சேவல்குமார், ஒன்றிய செயலாளர் காசிநாதன், பகுதி செயலாளர்கள் வெங்கட்ராமன், கந்தன், இலக்கிய அணி செயலாளர் ஏழுமலை, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் பிரித்வி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்