தாமிர கம்பிகளை திருடிய 2 சிறுவர்கள் கைது

கறம்பக்குடியில் தாமிர கம்பிகளை திருடிய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-12 19:05 GMT

கறம்பக்குடி வாணியத்தெருவை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 62). இவருக்கு சொந்தமான குடோனில் இருந்த தாமிர கம்பிகளை காணவில்லை. இது குறித்து அவர் கறம்பக்குடி போலீசில் புகார் கொடுத்தார். விசாரணையில் கறம்பக்குடி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் தாமிர கம்பிகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்