கிணற்றில் தவறி விழுந்த 2 கரடிகள்
ஆம்பூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த 2 கரடிகளை மீட்க வனத்துறையினர் தீவிரம்.
ஆம்பூரை அடுத்த அருங்கல்துருகம் அருகே வனப்பகுதியை ஒட்டி சக்கரவர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் நேற்று அந்த வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது கிணற்றில் 2 கரடிகள் தவறி விழுந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், போலீசார், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கரடிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாகியும் மீட்க முடியவில்லை. தொடர்ந்து மீட்புபணி நடைபெறுகிறது.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.