நாங்குநேரி:
நாங்குநேரி அருகே வலியநேரி ஏமன்குளம் சாலையில் உள்ள குளத்தின்கரையில் இருந்து அனுமதியின்றி லாரியில் சரள்மண் கடத்தப்பட்டது. இதையடுத்து இறைப்புவாரி கிராம நிர்வாக அலுவலர் நம்பி, லாரியை பிடித்து நாங்குநேரி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் மகாராஜன், பொக்லைன் எந்திர ஆபரேட்டர் விஜய் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.