பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பேர் கைது

பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-29 19:50 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் விபசாரம் நடப்பதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜெயங்கொண்டம் அண்ணா நகரில் வசிக்கும் சந்திரா (வயது 47) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி சில பெண்களும், சில ஆண்களும் வந்து சென்றதை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து, போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தியபோது அங்கு விபசாரம் நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து, பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய சந்திரா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த நாகல்குழி கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்