மண் அள்ளிய 2 பேர் கைது:டிராக்டர், பொக்லைன் எந்திரம் பறிமுதல்
ஆண்டிப்பட்டி அருகே மண் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி அருகே அனுப்பப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் மற்றும் பொக்லைன் எந்திரத்தை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில் அனுமதியின்றி டிராக்டரில் ஒரு யூனிட் மண் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டர் உரிமையாளரான அனுப்பப்பட்டியை சேர்ந்த முருககுமார் (வயது 24), பொக்லைன் எந்திர டிரைவரான அதே கிராமத்தை சேர்ந்த பாண்டியன் (23) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மண் அள்ள பயன்படுத்திய டிராக்டர், பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.