வாலிபரை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது
வாலிபரை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் வீரப்பன் மகன் கவியரசன் (வயது 28). இவர் திருவாமாத்தூர் பம்பை ஆற்று அணைக்கட்டு அருகே அமர்ந்திருந்தபோது அங்கு வந்த லட்சுமிபுரத்தை சேர்ந்த லட்சுமிபிரபு (49), அவரது மகன் பிரவீன்குமார் (29), ஒரத்தூரை சேர்ந்த பிரசாந்த் (26), சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த தினேஷ் (22) ஆகியோர் முன்விரோதம் காரணமாக கவியரசனை திட்டி தாக்கியதோடு கத்தியால் வெட்டினர். இதில் வலதுகை மணிக்கட்டில் காயமடைந்த கவியரசன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் லட்சுமிபிரபு உள்ளிட்ட 4 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமார், தினேஷ் ஆகியோரை கைது செய்தனர்.