மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேர் கைது
ஓசூரில் மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
சூளகிரி
ஓசூர் மூக்கண்டப்பள்ளி என்.டி.ஆர். நகரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது35). இவர் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அவர், சூளகிரியில் பேரிகை சாலையில் உள்ள கூட்டுறவு வங்கி அருகில் மோட்டார்சைக்கிளை நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர். இதை கவனித்த சந்தோஷ்குமார், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் 2 பேரையும் பிடித்து சூளகிரி போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள கோணமேடு பரமேஸ்வரன் நகரை சேர்ந்த தினேஷ்குமார் (20), பிரகாஷ் (23) என தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.