கூத்தாநல்லூர், மரக்கடை, கோரையாறு, மேலக்கடைத்தெரு, லெட்சுமாங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கூத்தாநல்லூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, லெட்சுமாங்குடியில் கஞ்சா விற்ற 2 பேரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் லெட்சுமாங்குடி, காமராஜர் காலனி தெருவை சேர்ந்த விஜய் (வயது26), ஜோதீஸ்வரன் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.