கஞ்சா, மதுபாட்டில்கள் வைத்திருந்த 2 பேர் கைது
கஞ்சா, மதுபாட்டில்கள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் ஆகியோர் நீடாமங்கலம் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள குட்ஷெட் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் வலங்கைமான் அருகே உள்ள கொட்டையூர் அம்பலக்கார தெருவை சேர்ந்த மாதவராஜ் (வயது22) என்பது தெரியவந்தது. மேலும் அவர் 100 கிராம் கஞ்சா மற்றும் புகையிலை பாக்கெட்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் நீடாமங்கலம் ரெயில்வேகேட் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வலங்கைமான் அருகே உள்ள நார்த்தாங்குடி தெற்குத்தெருவை சேர்ந்த அரவிந்த் (25) 10 மதுபாட்டில்கள் வைத்திருந்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர்.