வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் 'சிற்பி' திட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவு கலந்தாய்வு

‘சிற்பி’ திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகள் குறித்து இணை ஆணையர் சாமுண்டீஸ்வரி எடுத்துரைத்தார்.;

Update:2023-06-18 14:31 IST

சென்னை,

பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் 'சிற்பி' Students in Responsible Police Initiatives (SIRPI) என்ற திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், சென்னை மாநகராட்சியில் 100 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலா 50 மாணவர்களுக்கு காவல்துறை சார்பில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சிறார் குற்றங்களை தடுக்கவும், போதைப்பொருள் உள்ளிட்ட தீய பழக்கங்களை தவிர்க்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் ஓராண்டு நிறைவு கலந்தாய்வு கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 'சிற்பி' திட்டத்தின் மூலம் கடந்த ஓராண்டில் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகள் குறித்து இணை ஆணையர் சாமுண்டீஸ்வரி எடுத்துரைத்தார். மேலும் மாணவர்களின் சாதனைகள் தொடர்பான புகைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பேசிய சாமுண்டீஸ்வரி, சிற்பி திட்டத்தின் மூலம் 5 லட்சம் விதைப் பந்துகளை மாணவர்கள் தயாரித்ததாகவும், இதற்காக 3 விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


Full View

   

Tags:    

மேலும் செய்திகள்