பத்திரப்பதிவு மூலம் ஒரே நாளில் தமிழக அரசுக்கு ரூ.192 கோடி வருவாய்
பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டதால் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெற்றது.
சென்னை,
தமிழகத்தில், 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த அலுவலகங்களில் தினமும் சராசரியாக, 20,000 பத்திரங்கள் வரை பதிவாகும். குறிப்பிட்ட சில முகூர்த்த நாட்களில், பத்திரப்பதிவு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் நேற்று முகூர்த்த நாள் என்பதால் பத்திரப்பதிவு செய்வோர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துக் காணப்பட்டது. இதனையடுத்து பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டது.
இதனால் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெற்றது. இதன் மூலம் பத்திரப்பதிவுத்துறையில் ஒரே நாளில், ரூ. 192 கோடி ரூபாய் வரை வசூலாகியுள்ளது. நடப்பு நிதியாண்டில் பதிவுத்துறையில் ஒரு நாளில் இதுவரை வரப்பெற்ற வருவாயில் நேற்றைய தினம் பெறப்பட்ட வருவாயே அதிகமானது என தகவல் வெளியாகியுள்ளது.