ரூ.18.35 கோடியில் குடிநீர் திட்ட பணிகள் தொடக்க விழா

கல்லிடைக்குறிச்சியில் ரூ.18.35 கோடியில் குடிநீர் திட்ட பணிகள் தொடக்க விழா நடந்தது.

Update: 2023-09-18 19:07 GMT

அம்பை:

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.18.35 கோடியில் அம்ரூத் 2.0 திட்டத்தில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள ரத வீதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பார்வதி இசக்கிபாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

துணைத் தலைவர் க.இசக்கிபாண்டியன், செயல் அலுவலர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து உதவி என்ஜினீயர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்