மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 175 மனுக்கள் பெறப்பட்டன

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 175 மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2022-05-23 19:57 GMT

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டா் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 175 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அந்த மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும் அவர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம், சிறு, குறு தொழில்களுக்கான மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சமும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 4 பேருக்கு மொத்தம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்திற்கான நிவாரண நிதி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அமைக்கப்பட்டுள்ள இந்திய திருநாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் தாய்மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள் ஆகியோரின் நினைவை போற்றும் வகையில், அவர்களின் உருவங்கள் அடங்கிய நிரந்தர புகைப்படக் கண்காட்சியினை கலெக்டர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்