கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் 17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த எலக்ட்ரீசியன் கைது

கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் 17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த எலக்ட்ரீசியன் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-08 19:05 GMT

அழகியபாண்டியபுரம், 

கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் 17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த எலக்ட்ரீசியன் கைது செய்யப்பட்டார்.

எலக்ட்ரீசியன் கைது

குமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி அருகே உள்ள கேசவன்புதூர் மற்றும் திட்டுவிளை பகுதியில் நடந்த கொலை வழக்கில் நெல்லை மாவட்டம் பழவூர் நரிபாறை காலனி பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் செந்தில்வேல் (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது பழவூரிலும் கொலை வழக்கு உள்ளது. இந்த 3 கொலை வழக்குகளில் செந்தில்வேல் 2006-ம் ஆண்டு முதல் கோர்ட்டில் ஆஜராகமால் 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.

செந்தில்வேலுக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. அவரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் அவர் பழவூர் நரிப்பாறை அருகே உள்ள விசுவநாதபுரம் ஜங்ஷனில் இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் போலீசார் அங்கு சென்று செந்தில்வேலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்