தொழிலாளியை தாக்கிய 16 பேருக்கு வலைவீச்சு
தொழிலாளியை தாக்கிய 16 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
விருதுநகர் பராசக்தி காலனியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 26). கட்டிட தொழிலாளியான இவர் புல்லலக்கோட்டை ரோட்டில் உள்ள இருசக்கர வாகன ஒர்க் ஷாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது சின்ன மூப்பன்பட்டியை சேர்ந்த வேல்முருகன் உள்பட 16 பேர் 6 இருசக்கர வாகனத்தில் வந்து முன்விரோதம் காரணமாக அஜித்குமாரை தாக்கி படுகாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த அஜித்குமார் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அஜித்குமார் கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் மேற்கு போலீசார் வேல்முருகன் உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.