சாலை மறியலில் ஈடுபட்ட 16 பேர் கைது

கூடலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-16 14:16 GMT

கூடலூர், 

சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசியதாக நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து மாநிலம் முழுவதும் இந்து முன்னணியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இந்து முன்னணி பொறுப்பாளர் தினேஷ் குமார் தலைமையில் 16 பேர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புக்கு நின்றிருந்த கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 16 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்