கடந்த ஒரு வாரத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 15 பேர் கைது - சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கை

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கையால் கடந்த ஒரு வாரத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-04 03:19 GMT

சென்னையில் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட விருகம்பாக்கம் காந்தி நகர் மெயின் ரோடு வ.உ.சி. தெருவை சேர்ந்த சரவணன் (வயது 45), கஞ்சா விற்பனை வழக்கில் சிக்கிய கோடம்பாக்கம் வன்னியர் தெருவை சேர்ந்த அஜய் என்ற ரீட்டா (22), நெற்குன்றம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஆகாஷ் (22), திருமங்கலம் அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த டப்பா கார்த்திக் (23), கொலைமுயற்சி வழக்கில் கைதான நீலாங்கரை சிவன் கோவில் தெருவை சேர்ந்த அந்தோணி (24), ஆயிரம்விளக்கு அழகிரி நகரை சேர்ந்த பாண்டியன் (31), மக்கீஸ் கார்டன் பகுதியை சேர்ந்த வசந்த் (25), கொலை வழக்கில் கைதான திருவொற்றியூர் காலடிப்பேட்டையை சேர்ந்த தேவா (25), கிருஷ்ணமூர்த்தி (22), பரத் (22), சந்தோஷ் (22), தண்டையார்ப்பேட்டை எல்.ஐ.ஜி. காலனியை சேர்ந்த சதீஷ் (23), வழிப்பறி வழக்கில் சிக்கிய லோகநாதன் (24), வைத்தீஸ்வரன் (26), கொருக்குப்பேட்டை போலீஸ் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி லாரி மகேஷ் (26) ஆகிய 15 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

இதற்கான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்