வீட்டின் ஓட்டை பிரித்து 13 பவுன் நகைகள்-பணம் கொள்ளை

வீட்டின் ஓட்டை பிரித்து 13 பவுன் நகைகள்-பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-08 20:37 GMT

வையம்பட்டி:

நகைகள்-பணம் கொள்ளை

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் பிலோமினாள்(வயது 65). இவர் பூ வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவர் இரவில் அவரது ஓட்டு வீட்டில் இருப்பது வழக்கம். இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் நேற்று முன்தினம் இரவு அவர் மாத்திரை உட்கொண்டுவிட்டு, வீட்டில் அயர்ந்து தூங்கிவிட்டார்.

நேற்று காலை அவர் எழுந்து பார்த்தபோது வீட்டின் மேல் பகுதியில் இருந்த ஓடு பிரிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் பார்த்த போது ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த சுருக்குப்பை மாயமாகி இருந்தது. அந்த பையில் 13 பவுன் நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் வைத்திருந்தார். மர்ம நபர்கள் அவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்