120 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
ராஜபாளையத்தில் 120 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் 120 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள்
ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூவர்ண தீபா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அழகை நகர் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இரு சக்கர வாகனம் வந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாகனத்தை சோதனை செய்தனர். அதில் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
3 பேர் கைது
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அழகை நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 28), முகில்வண்ணம் பிள்ளை தெருவை சேர்ந்த கணேசன் (30), பி.டி.ஆர். நகரை சேர்ந்த நவநீதன் (27), தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த சங்கர் (26) என்பதும், புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
பின்னர் அவர்களிடம் இருந்த 120 கிலோ புகையிலை பொருட்களையும், இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 3 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கணேசன் என்பவரை தெற்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.