12 மணி நேர வேலை மசோதா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள்..!
12 மணி நேர வேலை மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் அமலில் இருந்து வரும் நிலையில், வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 17 மசோதாக்கள் சட்டத்துறைக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெறக்கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று சந்தித்து பேச உள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் இரவு 7 மணிக்கு இடதுசாரிகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் முதல்-அமைச்சரை சந்தித்து 12 மணி நேர வேலை மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்த உள்ளனர்.