குன்னூரில் 116 இடங்கள் பேரிடர் பாதிப்பு பகுதிகளாக அறிவிப்பு

குன்னூரில் 116 இடங்கள் பேரிடர் பாதிப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-07-07 19:15 GMT

குன்னூர்

குன்னூரில் 116 இடங்கள் பேரிடர் பாதிப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தென்மேற்கு பருவ மழை கேரளா, கர்நாடக மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யக்கூடும் என அறிவித்த நிலையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கன மழையினால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து அரசு துறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

116 இடங்கள்

குன்னூரில் மழையினால் ஏற்படும் பேரிடர்களை தவிர்க்க குன்னூர் தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். அனைத்து கருவிகளையும் ஆர்.டி.ஓ. பூஷண குமார் ஆய்வு மேற்கொண்டு மீட்பு பணிக்கு அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளதா என ஆய்வு செய்தார். அவர் முன்னிலையில் தீயணைப்புத்துறையினர் செயல் முறை விளக்கம் செய்தனர்.

அப்போது ஆர்.டி.ஓ. கூறும்போது, தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்ள அரசு துறையினர் தயாராக உள்ளனர். குன்னூரில் 116 இடங்கள் பேரிடர் பாதிப்பு ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அனைத்து துறையினரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற தயார் நிலையில் உள்ளனர். என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்