எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 11 பேர் காயம்

திருப்பத்தூர் பகுதியில் எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 11 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-03-03 18:00 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் பகுதியில் எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 11 பேர் காயம் அடைந்தனர்.

எருது விடும் விழா

திருப்பத்தூர் அருகே உள்ள சின்னகுனிச்சி கிராமத்தில் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது. திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, வெள்ளக்குட்டை, பர்கூர், ஊத்தங்கரை, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 170 எருதுகள் பங்கேற்றன.

ஊர் கவுண்டர்கள் ஆர்.நல்லதம்பி, எம்.பெரியசாமி, தலைமையில் முன்னாள் ஊர் கவுண்டர்கள் சுப்பிரமணி, மாணிக்கம், முன்னிலை வகித்தனர். முன்னாள்தலைவர் சேகர் வரவேற்றார்.

போட்டியை சப்- கலெக்டர் லட்சுமி, தாசில்தார் சிவப்பிரகாசம் தொடங்கி வைத்தனர். கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

11 பேர் காயம்

வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப் பாய்ந்து ஓடின. அப்போது இருபுறமும் நின்றிருந்த பொதுமக்கள் ஈருதுககளை உற்சாகப்படுத்த எருதுகள் மீது கைகளை வைத்து தட்டினார்கள். அப்போது காளைகள் முட்டியதில் 11 பேர் காயமடைந்தனர்.

குறைந்த நேரத்தில் வேகமாக ஓடி இலக்கை அடைந்த காளைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. ரூ.75 ஆயிரம் முதல் பரிசை ஆறுமுகம், மஞ்சுளா, தினகரன் வழங்கினார்கள். மொத்தம் 45 ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. எருது விடும் விழாவை இந்திய கால்நடை நலவாரிய ஜல்லிக்கட்டு கண்காணிப்பு அலுவலர் எஸ்.கே.மிட்டல் நேரில் பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்