தினமும் 107 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு தரம் பிரிப்பு

தஞ்சை மாநகராட்சி பகுதியில் தினமும் 107 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது என்று மேயர் சண்.ராமநாதன் கூறினார்.

Update: 2023-04-08 19:42 GMT

தஞ்சை மாநகராட்சி பகுதியில் தினமும் 107 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது என்று மேயர் சண்.ராமநாதன் கூறினார்.

தஞ்சை மாநகராட்சி

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் தஞ்சை மாநகராட்சியில் தூய்மையான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் விதமாக ஒவ்வொரு மாதமும் சிறப்பு தூய்மைப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரையிலான ஆண்டிற்கான முதல் நிகழ்ச்சியாக நேற்று கல்லுக்குளம் கோட்டத்திற்கு உட்பட்ட யாகப்பா நகர் மெயின் ரோடு பூங்காவில், மக்கள் பங்களிப்புடன் பொது இடங்களை சுத்தம் செய்தல் பணி நேற்று நடைபெற்றது.

முகாமை மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார். துணைமேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார், மண்டல குழு தலைவர் ரம்யா சரவணன், கவுன்சிலர் நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

107 டன் குப்பை சேகரிப்பு

பின்னர் மேயர் சண்.ராமநாதன் நிருபர்களிடம் கூறுகையில், தஞ்சை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 51 வார்டுகளில் உள்ள 54 ஆயிரத்து 234 வீடுகள், 8 ஆயிரத்து 953 வணிக நிறுவனங்களில் தினசரி சேகரமாகும் 107 டன் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கும் பணி 562 துப்புரவு பணியாளர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மக்கும் குப்பைகள் 64.2 மெட்ரிக் டன், 10 நுண் உர செயலாக்க மையங்களில் நுண்ணுரமாக்கப்பட்ட உரங்களாக பொதுமக்களுக்கு மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 42.8 டன் உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. என்றார்.

முகாம் ஏற்பாடுகளை மாநகர் நலஅலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி மற்றும் துப்புரவு ஆய்வாளர் செல்வமணி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்