அடிப்படை எழுத்தறிவு தேர்வை 1,020 பேர் எழுதினர்

அடிப்படை எழுத்தறிவு தேர்வினை 1,020 பேர் எழுதினார்கள்.

Update: 2023-03-20 18:45 GMT

தோகைமலை ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் "புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022-27" என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதோரை கண்டறிந்து அவர்களுக்கு எழுத்தறிவு அடிப்படை மற்றும் எண்ணறிவு பயிற்றுவிக்க தோகைமலை ஒன்றியத்தில் 60 ைமயங்களில் தன்னார்வலர்கள் மூலம் கடந்த 3 மாதங்களாக பயிற்சி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டு தேர்வு நேற்று நடந்தது. இதனை 1020 பேர் கலந்து கொண்டு எழுதினர். தேர்வு மையங்களை வட்டார கல்வி அலுவலர்கள் ராஜலெட்சுமி, மகாளி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் தமிழ்செல்வன் ஆகியோர் மேற்பார்வை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்