கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை
கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டில் கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக வந்த வாகனத்தை சோதனை செய்த போது, அதில் 22 கிலோ கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்ததுடன் வாகனத்தில் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த அர்ச்சுனன் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் விஜய பாண்டியன் ஆஜரானார். விசாரணை முடிவில், அர்ச்சுனன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹர குமார் நேற்று தீர்ப்பளித்தார்.