10% இடஒதுக்கீடு - 12-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு

10% இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழகத்தில் வரும் 12ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2022-11-08 09:09 GMT

சென்னை,

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்ட திருத்தம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

இந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 12-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க சட்டமன்ற கட்சித்தலைவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. 10% இடஒதுக்கீடு வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்