10 ரேஷன் கடைகளில் மலிவு விலை தக்காளி விற்பனை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ரேஷன் கடைகளில் மலிவு விலை தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திருவண்ணாமலையில் தக்காளி கிலோ ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது. திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தக்காளி விலை இதே நிலையில் நீடிக்கின்றனர்.
வெளிசந்தையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் 500 ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்யபடும் என அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை டவுனில் 5 ரேஷன் கடைகளிலும், செங்கம், செய்யாறு, ஆரணி, போளூர், வந்தவாசி ஆகிய பகுதிகளில் தலா ஒரு ரேஷன் கடைகளிலும் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
இதில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் மூலம் 4 கடைகளிலும், வேளாண் உற்பத்தி விற்பனையாளர்கள் சங்கத்தின் மூலம் 6 கடைகளிலும் மலிவு விலை தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
வெளிசந்தையில் கிலோ ரூ.180-க்கு தக்காளியை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் ரூ.60-க்கும் விற்பனை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.