வீட்டில் இருந்த தண்ணீர் டிரம்மில் விழுந்த 1½ வயது குழந்தை பலி
வீட்டில் இருந்த தண்ணீர் டிரம்மில் விழுந்த 1 ½ வயது குழந்தை பலியானது.
விருதுநகர் ஏ.டி.பி. காம்பவுண்டில் வசிப்பவர் தேசமுத்து. இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களது, 1½ வயது குழந்தை லோகேஷ் பாண்டி. நேற்று மதியம் தாய் ராஜலட்சுமி, லோகேஷ் பாண்டிக்கு மதிய உணவு கொடுத்து விட்டு சமையல் அறையில் வேலை செய்து கொண்டு இருந்தார். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த லோகேஷ் பாண்டி அங்கு 2½ அடி உயரமுள்ள தண்ணீர் "டிரம்" மை எட்டிப்பார்த்தபோது அதனுள் விழுந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்தவர்கள் யாரும் கவனிக்காத நிலையில் சிறிது நேரம் கழித்து குழந்தையை தேடினர். அப்போது லோகேஷ் பாண்டி தண்ணீர் இருந்த டிரம்மில் மூச்சுத்திணறி மயங்கிய நிலையில் கிடந்ததான். இதனால் அதிர்ச்சி அடைந்த தேசமுத்து, குழந்தையை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக தூக்கி சென்றார். அப்போது பரிசோதித்த டாக்டர்கள் லோகேஷ் பாண்டி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.