ரூ.1½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

ராமநாதபுரம் அருகே ரூ.1½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-05-27 18:25 GMT

ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் நேற்று மாலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சின்னக்கடை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த சொகுசு காரை திறந்து சோதனையிட்டனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூடை மூடையாக இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து 14 மூடைகளில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான 64 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்