ரூ.1½ கோடியில் தார்சாலை அமைக்கும் பணி

மயிலாடும்பாறை அருகே ரூ.1½ கோடியில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அந்த பகுதியில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா திடீரென்று ஆய்வு செய்தார்.

Update: 2023-10-11 22:45 GMT

வருசநாடு அருகே பொன்நகர்-பொன்னன்படுகை விலக்கு வரையிலான 3 கிலோ மீட்டர் தூர சாலை சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. இதையடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று சாலைைய சீரமைக்க ரூ.1 கோடியே 44 லட்சம் நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது. அதைத்தொடர்ந்து தற்போது பொன்நகர்-பொன்னன்படுகை விலக்கு இடையே தார்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் சாலை அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா திடீரென்று ஆய்வு செய்தார். அப்போது புதிதாக அமைக்கப்படும் தார் சாலையின் தரம் மற்றும் உறுதித்தன்மை குறித்து சோதனை செய்தார். மேலும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் தார் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, ஆண்டிப்பட்டி கோட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் திருக்குமரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்