மாணவன் உள்பட 2 பேர் ைகது

வேதாரண்யம் பகுதியில் கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மாணவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Update: 2023-10-10 18:45 GMT

வேதாரண்யம்:

உண்டியலை உடைத்து திருட்டு

வேதாரண்யத்தை அடுத்த மறைஞாயநல்லூர் கீழசத்திரக்கட்டளை வீரன் கோவில், தம்பிரான்குடி சைவ முனீஸ்வரர் கோவில், தேத்தாகுடி தெற்கு வைத்தியர்காடு முத்துமாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். மேலும் சைவமுனீஸ்வரர் கோவிலில் பொருத்தப்படாமல் வைத்திருந்த புதிய மின் மோட்டாரையும் திருடி சென்று விட்டனர். இது குறித்து வேதாரண்ம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

வாகன சோதனை

இந்த நிலையில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்- இன்ஸ்பெக்டர்கள் கேத்ரின் எஸ்தர், கலியபெருமாள் ஆகியோர் வேதாரண்யம்-நாகை மெயின் ரோட்டில் செம்போடை ஈரவாய்க்கால் பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

2 பேர் கைது

பின்னர் தொடர் விசாரணையில் அவர்கள் கீழ்வேளூர் ஓர்குடியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் தமிழரசன் (வயது35), மற்ெறாருவர் 18 வயது சிறுவன் என்பதும், இவர்கள் 2 பேரும் கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் மின்மோட்டாரை திருடி சென்றதும் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து தமிழரசன், சிறுவன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மின்மோட்டார் மற்றும் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

11-ம் வகுப்பு மாணவன்

கைது செய்யப்பட்ட சிறுவனை தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்டுள்ள சிறுவன் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்