செல்போனில் பேசியதை தாயார் கண்டிப்பு: கோரிமேட்டில், 17 வயது சிறுமி தற்கொலை

கோரிமேட்டில்,செல்போனில் பேசியதை தாயார் கண்டித்ததால் 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-15 21:32 GMT

கன்னங்குறிச்சி:

சேலம் கோரிமேடு ரம்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் கீதா. இவருடைய மகள் சிந்துஜா (வயது 17). இவர் 11-ம் வகுப்பில் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் செல்போனில் ஒருவருடன் தொடர்ந்து பேசிவந்ததாக கூறப்படுகிறது. இதை அவருடைய தாயார் கீதா கண்டித்து திட்டியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட சிறுமி சிந்துஜா, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிந்துஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்