குட்டியின் உடலை கவ்வியபடி சுற்றித்திரிந்த நாய்

dogs love affection

Update: 2022-11-15 18:38 GMT

மன்னார்குடி;

மன்னார்குடியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த குட்டியின் உடலை கவ்வியபடி ஒரு நாய் சுற்றித்திரிந்தது அப்பகுதி மக்களின் மனதை உருக செய்தது. இந்த பாசப்போராட்டம் பற்றி விவரம் வருமாறு:-

விபத்தில் நாய்க்குட்டி சாவு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரிசி கடை தெருவில் நேற்று முன்தினம் இரவு ஒரு நாய் தனது குட்டியுடன் சென்றது. அப்போது மர்ம நபர் ஒருவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் அடிபட்டு நாய்க் குட்டி இறந்தது. குட்டியை இழந்து சோகத்தில் தவித்த தாய் நாய் தனது குட்டியின் உடலை கவ்வியபடி அப்பகுதி முழுவதும் சுற்றித்திரிந்தது. பின்னர் ஒரு இடத்தில் குட்டியின் உடலை போட்டு அதன் அருகில் சோகமாக நீ்ண்ட நேரம் படுத்து கிடந்தது. அப்போது குட்டியின் உடலை அகற்ற வந்தவர்களை துரத்திய தாய் நாய் மீண்டும் அதன் அருகிலேயே படுத்துக்கொண்டது.

பாசப்போராட்டம்

மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியில் குட்டியின் உடலை தாய் நாய் கவ்வியபடி நடத்திய இந்த பாசப்போராட்டம் அப்பகுதி மக்களை நெகிழச்செய்தது.இந்த வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தெரு நாய் தானே என்று அலட்சியம் காட்டாமல் வாகனத்தில் செல்பவர்கள் கவனமுடன் செல்லவேண்டும். அவற்றிற்கும் பாச உணர்வு உண்டு. இன்ப- துன்ப உணர்வு உண்டு என்பதை உணர்ந்து வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்