தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

Security drill to prevent infiltration of terrorists

Update: 2022-11-15 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

கடல் வழியாக தங்கம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தலை தடுக்கவும், தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும் ஆண்டு தோறும் 2 முறை பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு சிவிஜில் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதன் ஒருபகுதியாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுதுறையில் சிவிஜில் எனும் கடல் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

படகில் சென்று ரோந்து பணி

வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் போலீசார்ஆறுகாட்டுத்துறை கடற்கரையில் புதிதாக நபர்களின் நடமாட்டம் உள்ளதா? என கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.பின்னர் போலீசார் படகில் நாகை வரை சென்று யாராவது மர்ம நபா்கள் படகுகளில் வருகிறார்களா? என ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

2 நாட்கள் நடக்கும்

மேலும் சோதனை சாவடிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

2 நாட்கள் நடைபெறும் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கடலோர குழுமபோலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

நாகை

நாகையில் இந்திய கடற்படையும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் இணைந்து தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் நாகை, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டனர். நாகையில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.இதில் கடல்பகுதிக்கு சென்று மீன்பிடிப்படகு உள்ளிட்டவைகளையும் சோதனை செய்தனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள், படகுகள் குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாக கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவர்களை போலீசார் கேட்டுக்கொண்டனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கடல்வழியாக ஊடுருவ முயற்சி செய்த 14 பேரை போலீசார் பிடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்