ஹூண்டாய் ஆரா

கார் தயாரிப்பில் இரண்டாமிடத்தில் உள்ள கொரியாவின் ஹூண்டாய் நிறுவனம் `ஆரா’ என்ற பெயரில் புதிய மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2023-02-02 08:32 GMT

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.6,29,600. இந்தக் காரில் 30 விதமான பாதுகாப்பு அம்சங்கள், 4 ஏர் பேக்குகள் உள்ளன. வாடிக்கையாளர்கள் விரும்பினால் இதில் 6 ஏர் பேக் உள்ள காரை தேர்வு செய்து கொள்ளலாம். இதில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி, டயர் காற்றழுத்த கண்காணிப்பு கருவி, விரைவாக சார்ஜ் ஆகும் யு.எஸ்.பி. வசதியுடன், மிக அழகிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. கருப்பு நிற ரேடியேட்டர் கிரில், பகலில் ஒளிரும் விளக்கு (டி.ஆர்.எல்.) மற்றும் முன்புற பம்பர் ஆகியன காரின் தோற்றப் பொலிவை மேலும் மெருகேற்றுகிறது.

முன்புற பம்பரின் வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளதோடு அதன் அகலமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அலாய் சக்கரம், குரோமியத் தாலான கதவு கைப்பிடிகள், அழகிய பின்புற ஸ்பாயிலர் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்களாகும். எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிடி கண்ட்ரோல், வெகிஹிள் ஸ்டெபிலிடி நிர்வாகம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், 5 மேனுவல் கியர்கள் உள்ளிட்ட சிறப்பம் சங்களைக் கொண்டது. யாராவது காரை திருட முயன்றால் எச்சரிக்கை மணி ஒலிக்கும் வசதியும் கொண்டது.

ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, குரல்வழி கட்டுப்பாட்டு வசதி, புளூடூத் இணைப்பு உள்ளிட்ட அம்சங்களும் இதில் உள்ளன. குரூயிஸ் கண்ட்ரோல், ஸ்மார்ட் சாவி வசதி கொண்டது. மூன்று வேரியன்ட்கள் வந்துள்ளன. இவற்றில் மேனுவல் கியர் வசதி மற்றும் தானியங்கி கியர் வசதி உள்ள மாடல்கள் உள்ளன. இதில் பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி.யில் இயங்கும் மாடலும் வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்