பி.எம்.வி. பேட்டரியில் ஓடும் குவாட்ரி சைக்கிள்

மும்பையைச் சேர்ந்த மின் வாகன தயாரிப்பு ஸ்டார்ட் அப் நிறுவனம் பேட்டரியில் இயங்கும் சிறிய ரக காரை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2022-11-24 14:19 GMT

தனிநபர் போக்குவரத்து வாகனங்கள் பிரிவில் பேட்டரியில் இயங்கும் கார்களில் மிகக் குறைந்த விலைக்கு வந்துள்ள (சுமார் ரூ.4.79 லட்சம்) கார் இதுவாகும். காராக இருந்தபோதிலும் இது குவாட்ரி சைக்கிள் என்றழைக்கப் படுகிறது.

இரண்டு பேர் பயணிக்கும் வகையிலான இந்த கார் 13 ஹெச்.பி. திறன் 50 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையைக் கொண்டது. இதுவரை இந்த காரை வாங்க 6 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். டிரைவர் பின்னிருக்கையில் ஒருவர் அமர்ந்து பயணிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டிருந்தாலும், இதற்கு நான்கு கதவுகள் உள்ளன.

புனேயில் உள்ள ஆலையில் இந்த கார்கள் தயாராகின்றன. இந்த காரில் 48 வோல்ட் லித்தியம் அயன் பாஸ்பேட் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காரில் 3 மாடல்கள் உள்ளன. முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கி.மீ. தூரம் பயணிக்கும் மாடலும், அடுத்ததாக 160 கி.மீ. மற்றும் 200 கி.மீ. தூரம் பயணிக்கும் மாடல்களையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதை ஸ்டார்ட் செய்து 5 விநாடிகளில் 40 கி.மீ. வேகத்தை எட்டிவிட முடியும்.

இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கி.மீ. ஆகும். 1,157 மி.மீ. அகலம், 2,915 மி.மீ. நீளம் மற்றும் 1,600 மி.மீ. உயரம் கொண்டது. டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தி தற்போது உற்பத்தியை நிறுத்திய சிறிய ரகக் காரான டாடா நானோவை (3,099 மி.மீ.) விட இது நீளத்தில் சிறியது. குரூயிஸ் கண்ட்ரோல், ரிமோட் பார்க்கிங் உள்பட பல வசதிகளைக் கொண்டது.

Tags:    

மேலும் செய்திகள்