மஹிந்திரா ஸ்கார்பியோ என் இஸட் 4
மஹிந்திரா நிறுவனத் தயாரிப்புகளில் ஸ்கார்பியோ மாடல் மிகவும் பிரபலமானதாகும். இதில் தற்போது என். இஸட் 4 என்ற மாடல் அறிமுகமாகியுள்ளது.
இதில் மூன்று விதமான ஓட்டும் நிலைகள் (ஸிப், ஸாப் மற்றும் ஸூம்) உள்ளன. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.13.49 லட்சத்திலிருந்து சுமார் ரூ.16.44 லட்சமாகும்.
இதில் 17 அங்குல சக்கரம் பயன்படுத்தப் பட்டுள்ளது. முகப்பு விளக்கு ஹாலோஜன் பல்புகளைக் கொண்டுள்ளது. பின்புற விளக்குகள் எல்.இ.டி.யால் ஆனது. உள்புறத்தில் 8 அங்குல தொடு திரை உள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதி உள்ளது. இது தவிர 4.2 அங்குல வண்ண டிஸ்பிளே இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. இது 2 லிட்டர் டர்போ சார்ஜ்டு டீசல் என்ஜினைக் கொண்டது.
இது 175 ஹெச்.பி. திறனையும் 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. 6 கியர்களைக் கொண்டதாக மானுவல் மற்றும் ஆட்டோ மேடிக் வேரியன்ட்களில் வந்துள்ளது. இந்த மாடல் நான்கு சக்கர சுழற்சி கொண்டது.