டுகாடி பனிகேல் வி 4 ஆர்
ரேஸ் பிரியர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் டுகாடி நிறுவனம் பனிகேல் வி 4 ஆர் மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
998 சி.சி. திறன் கொண்ட வி 4 என்ஜின் 218 ஹெச்.பி. திறனை 15,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 111 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 12 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும்.
இது 6 கியர்கள், நான்கு விதமான ஓட்டும் நிலைகளைக் கொண்டது. இதில் ஆஹ்லின்ஸ் மோனோ ஷாக் அப்சார்பர் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதன் பெட்ரோல் டேங்க் 17 லிட்டர் கொள்ளளவு கொண்டது. சீறிப் பாயும் வகையில் இதன் எடை (188.5 கி.கி) குறைக்கப்பட்டுள்ளது. இதில் என்ஜின் பிரேக் கண்ட்ரோல் சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாதாரண சாலைகளில் ஓட்டுவது மற்றும் பந்தய மைதானத்தில் ஓட்டுவதற்கேற்ப என்ஜின் செயல்பாடுகளை மாற்ற முடியும்.