பஜாஜ் சி.டி. 125 எக்ஸ்

இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் பிரபலமான இந்திய நிறுவனமான பஜாஜ் தற்போது சி.டி. 125 எக்ஸ் என்ற புதிய மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2022-08-31 08:37 GMT

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.71,345. 125 சி.சி. பிரிவில் விலை குறைந்த மாடலாக இது அறிமுக மாகியுள்ளது. கருப்பு, சிவப்பு மற்றும் நீலம் உள்ளிட்ட மூன்று கண்கவர் வண்ணங் களில் இது வந்துள்ளது.

இது 124.4 சி.சி. திறனுடைய ஏர்கூல்டு என்ஜினைக் கொண்டது. 10.9 பி.எஸ். திறனை யும், 11 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை யையும் கொண்டது. 5 கியர்கள் உடையது. முன்புறம் டெலஸ்கோப்பிக் போர்க் மற்றும் பின்புறம் இரு புறமும் உடைய ஷாக்அப்சார்பரைக் கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் (சி.பி.எஸ்.) உடையது இதன் சிறப்பம்சமாகும். டிரம் பிரேக் மாடலும், டிஸ்க்பிரேக் மாடலும் கிடைக்கும். 17 அங்குல அலாய் சக்கரம் மற்றும் டியூப்லெஸ் டயர் இதன் சிறப்பாகும்.

அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் ஸ்மார்ட்போன் சார்ஜிங் போர்ட் வசதி முன்புறம் உள்ளது. வட்ட வடிவிலான முகப்பு விளக்கு, பகலில் ஒளிரும் விளக்கு மற்றும் பெட்ரோல் டேங்கில் ரப்பர் பேட் மற்றும் முன்புற கிராஷ் கார்டு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்