வரலாற்று தலைவர்களின் செல்பிகள்...! இணையத்தை கலக்கும் படங்கள்
உலகத் தலைவர்கள் ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பது போலவும் அவர்கள் செல்பி எடுப்பது போலவும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
லண்டன்
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜியோ ஜான் முல்லூர் என்பவர் மிட்ஜர்னி என்ற மென்பொருளைப் பயன்படுத்தி கற்பனையான சில புகைப்படங்களை உருவாக்கி உள்ளார்.
உலகத் தலைவர்கள் ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பது போலவும் அவர்கள் செல்பி எடுப்பது போலவும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
படங்கள் நன்றி Jyo John Mulloor instagram
ஏசு கிறிஸ்து தனது கடைசி விருந்தின் போது சீடர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டது போலவும், மாவீரன் நெப்போலியன் வாட்டர் லூ போரின் போது தனது வீரர்களுடன் எக்காளமிட்டு சிரிப்பது போன்றும் படங்களை வெளியிட்டிருந்தார்.
உலக அழகி கிளியோபாட்ரா, ராணி எலிசபெத், போப் பிரான்சிஸ் போன்றோரும் தாங்களாகவே செல்பி எடுப்பது போன்று செயற்கை நுண்ணறிவு புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
மகாத்மா காந்தி, ஆல்பர்ட் ஐன்ஸ்டின்,ஆபரகாம் லிங்கன், ஜவகர்லால் நேரு, சேகுவேரா, டாக்டர் அம்பேத்கார், ஜோசப் ஸ்டாலின், மதர் தெரேசா,வின்ஸ்டன் சர்ச்சில்,நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்,ராஜீவ் காந்தி, ஜான் கென்னடி,நெப்போலியன், சார்லி சாப்ளின்,மர்லின் மன்றோ ஆகியோர் படங்களையும் உருவாக்கி உள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். அது தற்போது வைரலாகி உள்ளது.